நீர் என் சொந்தம் நீர் என் பக்கம்
துன்ப நேரங்களில்
ஆழியின் ஆழங்களில் ஆனந்தம் நீர் எனக்கு
சூரைச்செடியின் கீழிலும் 
உம் சமூகம் என்னைத் தேற்றுமே
வறண்ட பாலைவன வாழ்க்கையில்
தாகத்தால் என் நாவு வறண்டாலும்
ஆகாரின் அழுகுரல் மாற்றினவர்
என் தாகம் தீர்க்கும் வல்லவர்
நெறிந்த நாணலை முறியாதவர்
மங்கியெரியும் திரியை அணையார்
புலம்பலை களிப்பாய் மாற்றுபவர்
விடுதலை தேவன் இயேசு பரன்
 
No comments:
Post a Comment