Friday 1 July 2011

உன்னை அதிசயம் காணச்செய்வேன்



உன்னை அதிசயம் காணச்செய்வேன்
நீ அற்புதம் கண்டிடுவாய்
என்று வாக்களித்தார் தேவன்
இன்று நிறைவேற்ற வந்துவிட்டார்

வழிதிறக்கும் அதிசயம் நடந்திடுமே
செங்கடலும் பிளந்தே வழிவிடுமே
தடைகளெல்லாம் தகர்ந்தே போகுமே
இடஞ்சலெல்லாம் இன்றே மறைந்திடுமே

குறைகளெல்லாம் நிறைவாகும் அதிசயமே
இறைமகனாம் இயேசுவால் நடந்திடுமே
வாதையெல்லாம் மறைந்தே போகுமே
பாதையெல்லாம் நெய்யாய் பொழிந்திடுமே

No comments:

Post a Comment