Saturday 8 June 2013

உனக்குள்ளே இருக்கின்ற



உனக்குள்ளே இருக்கின்ற
உன் இயேசு என்றும் பெரியவரே -2
நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான
பெரிய காரியங்கள் செய்திடுவார் -2

இல்லையென்ற நிலை வந்தாலும்
இருப்பது போல் அழைக்கும் தேவன் -2
பெரியவர் உனக்குள்ளே இருக்கின்றார்
பார்த்துக் கொள்வார் நீ கலங்காதே
பார்த்துக் கொள்வார் நீ கலங்காதே

சூழ்நிலை எல்லாம் எதிரானதோ
சுற்றத்தார் உன்னில் பகையானாரோ -2
அழைத்தவர் உனக்குள்ளே இருக்கின்றார்
பார்த்துக் கொள்வார் நீ கலங்காதே
பார்த்துக் கொள்வார் நீ கலங்காதே

No comments:

Post a Comment