Saturday 8 June 2013

அசைவாடும் ஆவியே



அசைவாடும் ஆவியே
தூய்மையின் ஆவியே -2
இடம் அசைய உள்ளம் நிரம்ப
இறங்கி வாருமே -2

பெலனடைய நிரப்பிடுமே
பெலத்தின் ஆவியே -2
கனமடைய ஊற்றிடுமே
ஞானத்தின் ஆவியே -2

தேற்றிடுமே உள்ளங்களை
இயேசுவின் நாமத்தினால் -2
ஆற்றிடுமே காயங்களை
அபிஷேக தைலத்தினால் -2

துடைத்திடுமே கண்ணீரெல்லாம்
கிருபையின் பொற்கரத்தால் -2
நிறைத்திடுமே ஆனந்தத்தால்
மகிழ்வுடன் துதித்திடவே -2

No comments:

Post a Comment